Wednesday, August 20, 2008

655.தேவன் கோயில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று

ஆண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
பெண்:தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
ஆண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
பெண்: உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது ( தேவன் கோயில்)

ஆண்: நானும் நின்றேன் சோலை ஓரம்
பெண்: நீயும் வந்தாய் மாலை நேரம்
ஆண்:பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பெண்:பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
ஆண்: காதல் தேவியே நீ என் ஜோதியே
பெண்: ஊஞ்சல் போலே என்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
ஆண்: கண்ணே நீயும் கேளாயே
பெண்: அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரைக்கண்டு இங்கே நின்றாய்

ஆண்: உள்ளம் என்ற மேடை உண்டு ஆடவா
பெண்: கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்:ராகம் பாடும் நேரம் என்று

பெண்:வானும் காற்றும் உந்தன் தேவை
ஆண்:எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
பெண்:உன்னை எண்ணி ஏங்கும் பூவை
ஆண்: உந்தன் அன்பே என்றும் தேவை
பெண்:நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
ஆண்:காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
பெண்: கண்ணா நீயும் கேளாயோ
ஆண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
பெண்: கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
ஆண்: உள்ளம் உந்தன்வாசல் தேடி வந்தது
பெண்: தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடலைப்பாடியவர்கள்:ஜானகி ,சுரேந்தர்
திரைப்படம் : நான் பாடும் பாடல்
இசையமைத்தவர்: இளையராஜா

4 Comments:

ஆயில்யன் said...

ரொம்ப நாட்கள் கழித்து கேட்கிறேன் இந்த பாடலை! ஊரிலிருந்த காலத்தில் அதிகம் வானொலிகளில் கேட்ட பாடலும் கூட!

நன்றி முத்தக்கா!

Thamiz Priyan said...

நானும் இந்த பாட்டை அவ்வப்போது முணுமுணுப்பேன்... கேட்க வாய்ப்பில்லாமல் போனது.
நன்றி கயலக்கா ;)

ராமலக்ஷ்மி said...

"நான் பாடும் பாடல்" எனது கல்லூரிக் காலத்தில் வெளிவந்த படம். படமும் எல்லா பாடல்களும் ஹிட். இப்பாடல் அதிகம் வானொலியில் ஒலிபரப்பப் பட்ட ஒன்று அப்போதே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் நன்றி தமிழ்பிரியன்

-----
மிக இனிமையான பாடல்கள் இல்லையா ராமலக்ஷ்மி எல்லாமே?

Last 25 songs posted in Thenkinnam