Friday, August 8, 2008

641நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு


ஸ்ரீ.காரைக்குறிச்சி அருணாசலம்


நாதஸ்வர ஓசையிலே...>> வானொலித் தொகுப்பு

திரு. அகிலா என்.விஜயகுமார், திருப்பூர் எனது நண்பர் அவரின் வானொலி படைப்பாக நாதஸ்வரம் இசைக்கருவி சினிமா பாடல்களில் எவ்வாறு உபயோகப்பட்டிருக்கிறது என்பதை தன் என்னங்களை ஆக்கமாக ஒலிவடிவாக இனிமையான பாடல்களூடன் வானொலி பதிப்பாக எனக்கு அனுப்பினார். இந்த ஒலித்தொகுப்பு கோவை சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியில் ஒலிப்பரப்ப பட்டது.

இதேபோல் சென்ற மாதம் இதே தேன்கிண்ணத்தில் காலதேவனும் கலைரசிகனும் என்ற ஒலித்தொகுப்பை எனது நண்பர் சேலம் திரு. ராஜ்குமார் படைப்பை அவரின் சார்பாக வழங்கினேன் அதை அனைவரும் கேட்டு இன்புற்றிருப்பீர்கள்.

மேற்கண்ட இரு நண்பர்களூம் எனக்கு சமீபத்தில் வானொலியின் மூலம் நண்பர்களானவர்கள். சரியாக சொல்லவேண்டுமென்றால். என்னுடைய ஒலித்தொகுப்பான “பாடும் நிலா பாலு” தளத்தில் ”பாடும் நிலாவும் பரமரசிகனும்” என்ற தலைப்பில் ஓர் ஒலித்தொக்குப்பு ஜூன் 4ஆம் தேதி அன்று எனது அபிமான பாடகர் டாக்டர் பாலுஜியின் பிறந்த நாளில் ஒலிபரப்பினார்கள். அது போலவே இதுவும் ஒரு வித்தியாசமான இனிமையான பாடல்கள் உடைய ஒலித்தொகுப்பு. சந்தேகத்திற்க்கு இடமில்லாமல் வானொலி அறிவிப்பாளர் திரு. லக்‌ஷ்மி நாராயணா அவர்கள் டிஜிட்டல் குரலில் மறுமுறை தேன் கிண்ணம் ரசிகர்களுக்காக வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தங்களீன் ஆர்வத்தின் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. திரு. ஆர்.ஜி. லக்‌ஷ்மி நாராயணா குரலில் கேட்டு மகிழுங்கள் இந்த ஒலித்தொகுப்பை.

நாதஸ்வர நாயணத்தில் மூழ்க தாயாராகுங்கள். திருப்புர் அகிலா என்.விஜயக்குமார் அவர்களின் அபார உழைப்பிற்க்கு தேன்கிண்ணம் பதிவாளர்கள் சார்பாக மிக்க நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் பெருமையடைகின்றேன்.

குறிப்பு: ஒலித்தொகுப்பின் நடுவில் சில வானொலி விளம்பரங்கள் தவிர்க்க முடியவில்லை எப்போதும் தேன்கிண்ணத்தில் பாடல் மட்டும் கேட்டு வரும் இசைப்பிரியர்களூக்கு இதோ இந்த ஒலித்தொகுப்பு விளம்பரத்துடன் கேட்பதும் ஒரு வித்தியாமாக இருக்கும். எந்த வித உட்கருத்துடனும் இதை நான் சொல்லவில்லை. ஒலித்தொகுப்பு இறக்குமதி வகையில் பதியப்பட்டுள்ளது. ஆகையால் ஒலித்தொகுப்பை இறக்கு மதி செய்து விளம்பரங்களளை விரும்பாதவர்கள் ஓட்டி விட்டு கேளூங்கள். ஆணால், மறக்காமல் படைப்பாளிக்கு ஒரு வாழ்த்துச்சொல்லிவிடுங்கள்.

1. நாதஸ்வரம் ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் - பூவும் பொட்டும்.

2. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு, கந்தன் கருணை,

3. நலந்தானா உடலும் உள்ளமும், தில்லானமோகனாம்பாள், நாதஸ்வரம் - மதுரை சகோதரர்கள்

4. தங்கத்தேரோடும் வீதியிலே, லக்ஷ்மிகல்யாணம்

5. எட்டு அடுக்கு மாளிகையில், பாதகாணிக்கை

6. சித்தாடை கட்டிக்கிட்டு, வண்ணக்கிளி

7. நடக்கும் என்பார் நடக்காது, தாயைக்காத்த தனயன்

8. இத்தன் மாந்தருக்கும் ஒரு கோவில் போதாது, உண்மையே உன் விலை என்ன?

9. சிங்கார தேவனே, கொஞ்சும் சலங்கை

Get this widget | Track details | eSnips Social DNA

4 Comments:

இராம்/Raam said...

ரவி சார்,

சூப்பரு.... சிங்காரவேலன் பாடல்தான் கேட்க அருமையாக இருக்கு.. :)

Covai Ravee said...

வாங்க இராம் சார்,

//சூப்பரு.... சிங்காரவேலன் பாடல்தான் கேட்க அருமையாக இருக்கு.. :)//

ஆமாங்க அந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் ஜானகியம்மான்னா ஜானகியம்மாதான். எல்லா பாடல்களுமே ரொம்ப பழைய பாடல்களாக இருக்கும். நட்சத்திர வாரம் போகும் போது இப்படி நடுவே நடுவே இடையூறாக இருப்பது எனக்கு என்னவோ போல் தான் இருக்கிறது. என்ன பன்றது? நம்ம இசைப்பிரியர்களூக்கு உடனே படைக்கனும் என்ற ஆவல் தான் காரணம். வருகைக்கு நன்றி.

Anonymous said...

Dear Covai Ravee sir,

This is incredible !You have kept each and every songs as per text book standards and i have no hesitation to appreciate your dedication,hardwork and above all deep knowledge in Tamil songs. Guruji had sung 37000 plus songs. Like our beloved guruji , his sincere parama rasigar is also aiming a big target !I wish and pray that you will get an internationl award for your perfection in these works.

Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu

Covai Ravee said...

Dear Udhayabanu sir

Thanq very much for your loving comments. All credits goes to Mr.Akila Vijayakumar, Tiruppur.

Last 25 songs posted in Thenkinnam