Wednesday, August 13, 2008

647. தேன்மொழி எந்தன் தேன்மொழி

தேன் மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது
அழகே நீ தான் எங்கே? எங்கே?
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது

தேவலோகத் தேரில் இவள் பாரிஜாதப் பூவா
பாச தீபம் ஏந்தும் ஒரு ஆசை கோவில் தானா
பாதம் முகம் போதும் ஒரு போதை வலை வீசும்
கூந்தல் ஒரு பாரம் அது கோடை மழை மேகம்
யாரடி நீ.... யாரடி நீ தேவதையா
கனவு உனது உடல் ஆனதே
காற்றினிலே பார்வைகளால்
கவிதை எழுதி வரும் பாவையே
வாய்மையின் வானம் ஆயிரம் காலம்
வளர வளரும் நிலவே (தேன்மொழி)

மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும்
இன்பக் கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும்
உனது வதனம் அமுதை பொழியட்டும்
எனது நினைவு முழுதும் அழியட்டும் (உனது வதனம்)
கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான்
கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான்
கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை (தேன்மொழி)

Then Mozhi... -

திரைப்படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசையமைத்தவர்: இளையராஜா
பாடலைப்பாடியவர்: மனோ

விரும்பி கேட்டவர்: மஜா

6 Comments:

கானா பிரபா said...

மனோ பாடி முதலில் பிரபலமான அருமையான பாட்டு, அப்போல்லாம் மனோகர் என்று தான் டைட்டிலில் வரும். பாட்டை தான் ராதாரவி, ராகவேந்தர் கோஷ்டிக்கு நடிக்க கொடுத்து கெடுத்துவிட்டார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி கானா பிரபா .
இந்த படம் ஒரு கொடுமையான படம் ..ஆனா பாட்டுல்லாம் நல்லா இருக்கும் இல்லையா.. எடுத்தவிதம் பொருத்தவரை இந்த பாட்டும் சோகமானது தான்.

யட்சன்... said...

மனோ பாடிய முதல் தமிழ் பாடல் இது என நினைக்கிறேன்....

தவறிருந்தால் திருத்தவும்.

ராஜ நடராஜன் said...

எனக்கு இப்பவும் சந்தேகம்.பாடல் வரிகளை எங்கேயிருந்து சுடுகிறீர்கள்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யட்சன் எனக்குப்பாடல்களை ரசிக்கமட்டுமே தெரியும்..அதன் பிண்ணனிகளெல்லாம் நினைவு வச்சிக்கத்தெரியாது.. கானா வே இது முதலில் பாடிய ப்ரபலமான பாடல்ன்னு மட்டும் தான் சொல்லிட்டு போயிருக்காரு அதனால் இது முதல் பாட்டான்னு தெரியல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராஜ நடராஜன் ப்ரைபைல் படம் மாத்ரியே ரொம்ப யோசிக்காதீங்க.. முதலில் கூகிள் செய்வோம் இருந்தா அதை எடுத்துப்போம்..இல்லாவிட்டால் கேட்டும் எழுதுவோம்.. கூகிளில் கிடைக்கிறது என்பதற்க்காக அப்படியே போடுவதில்லை இந்த பாட்டுக்கூட இணையத்தில் இருக்கிறது , ஆனால் சில பல பிழைகளுடன்.. மீண்டும் கேட்டு திருத்தி தான் இங்கே இட்டிருக்கிறேன்.. இந்த பாடல் கேட்பதற்கும் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது என்பதால் எம்பெட் செய்ய கிடைக்கவே இல்லை .. வீடியோவாக கிடைக்கிறது. ஆனால அதைப்பார்த்தால் பாட்டை ரசிக்கமுடியாது என்பதால் அந்த லிங்க்கை எம்பெட் செய்யவில்லை.

Last 25 songs posted in Thenkinnam