பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
(பாடுவது கவியா)
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(பேசுவது கிளியா)
மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
(பேசுவது கிளியா)
படம்: பணத்தோட்டம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா
Wednesday, August 27, 2008
663. பேசுவது கிளியா
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:41 AM
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment