Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்
ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா
டைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்
ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்
ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே
குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம்
மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)
மழை மேகம் எங்கே அதைத் தேடி
நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை வந்தால்
வருக வருக என்று வரவேற்போம்
ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்
(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)
காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்
கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்
கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லிக்கொடுப்போம்
(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)
படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: க்ரீஷ், நரேஷ் ஐயர்
Monday, August 4, 2008
634. ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:16 AM
வகை 2008, AR ரஹ்மான், க்ரீஷ், நரேஷ் ஐயர், நா. முத்துக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்//
நல்ல வரிகள்.
வலி மறப்போம்
வளம் சேர்ப்போம்
Post a Comment