ஆகா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தலின்றிப் போகுமா
ஈடில்லா இருபறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போது பகை வல்லூறாகத் தோன்றுமோ(ஈடில்லா)
வல்லூறானதை வனத்தில் வாழும் வேடன்
ஆகி நான் (வல்லூறானதை)
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் -
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆஆ
(ஆகா நம் ஆசை )
அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே
(உன்)அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல
ஆனந்தமானேன் என் கண்ணே (அருமை மொழி)
ஆஆஆஆ
உமது ஆனந்தமே அழியாச்செல்வமே(2)
ஆருயிரே நானுனக்கே சொந்தமே(2)-என்
ஆஆஆஆஆ
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை
ஆளுவோம்- நாம் (ஈருடல் )
திரைப்படம் : தாய்க்குப்பின் தாரம்
பாடலைப்பாடியவர்கள்: டி.எம். எஸ். P.பானுமதி
இசையமைத்தவர்: கே.வி .மகாதேவன்
பாடல்வரிகள் : சி.ஏ.லக்ஷ்மணதாஸ்
Monday, August 25, 2008
660.ஆகா நம் ஆசை நிறைவேறுமா.....
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:15 PM
வகை C.A.லக்ஷ்மணதாஸ், KV மகாதேவன், P.பானுமதி, TM சௌந்தர்ராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment