Tuesday, August 26, 2008

662.பனி இல்லாத மார்கழியா?

பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா

அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண் மனமா
மழையில்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா(2)
(பனி இல்லாத )


தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா(2)


பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா(2)
(பனி இல்லாத)


விரும்பிக்கேட்டவர் : ஒற்றை அன்றில் ஸ்ரீ
திரைப் படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்கள்: பி.சுசீலா, டி.எம்.எஸ்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

3 Comments:

சந்தனமுல்லை said...

காலத்தால் அழியாத பாட்டு இல்லையா இது!!
பகிர்ந்தமைக்கு நன்றி முத்துலெட்சுமி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேள்வி பதில் பாட்டு கண்ணதாசன் ஸ்பெஷலாச்சே.. முல்லை.

Anonymous said...

நல்ல அருமையான பாடல்களை தந்துள்ளீர்கள்.உங்கள் வலைப்பதிவுக்கு இன்றுதான் வந்தேன்.வாழ்த்துகள்

Last 25 songs posted in Thenkinnam