Wednesday, September 18, 2013

பாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணிநெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கை ர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிபபானே!


என்ன விட்டு
வேற ஒன்ன
தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற?

பூவை விட்டு பூ தாவும் வண்டு
வாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க உன்னைத்தான் தேடும்
யாரப் பாத்து நீயும்
இந்த கேள்வி கேக்குற?

வெக்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே!
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்!
கத்துத்தர வேற பொண்ண பார்!

அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்?
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்!

நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே!


படம்: பிரியாணி
இசை: யுவன் ஷஙகர் ராஜா
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK

எதிர்த்து நில் - பிரியாணிதிரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!


தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்
தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து!


ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்!படம்: பிரியாணி
இசை:  யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், டி. இமான், விஜய் ஆண்டனி, எஸ்.தமன்Thursday, September 12, 2013

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே

மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

பெருங்காற்றிலே மரமாகிறேன்
வேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே

தனியாக நான் நொடி நேரமும்
இருந்தால் அது எனை கொல்லுதே

ஏன் என்று தெரியாத பயம் தோன்றுதே
ஆனாலும் இது கூட இதம் ஆனதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


ஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்
பார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்

சில நேரத்தில் சிலை போலவே
செய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்

புரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே
முழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே

தொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே
காலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


சில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்
என் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே

பொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்
என் புலன் ஐந்தும் பனியாகிக் கரைகின்றதே

உனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா
உனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா

அடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே
ஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

திரைப்படம் : கண்பேசும் வார்த்தைகள்
இசை:ஷமந்த்
வரிகள் : விவேகா
பாடியவர்கள் : விஜய் யேஸுதாஸ், ஹரிணி

Wednesday, September 11, 2013

என்ன வேண்டும் - மேகா

raaga.com : Enna Vendum

என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதற்குள் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
சத்தமில்லா முத்தம் வேண்டுமா
சாந்து பொட்டு வாசம் வேண்டுமா
மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா
குங்குமத்தைக் காண வேண்டுமா
எப்போதும் எப்போதும்
எட்டிப் போவதென்றும் இல்லையே

கொடுத்தேன் நெஞ்சைக் கொடுத்தேன்
நான் கொடுத்தால் கொடுத்ததுதானே
பிடித்தேன் இடம் பிடித்தேன்
நான் பிடித்தால் பிடித்ததுதானே
பொய்யாய் நீ சொன்னாலும்
மெய்யாய் நான் கேட்பேனே
மெய்யாய் நீ சொன்னாலும்
உண்மைதானா என்பேனே
நீ போட்ட மந்திரம்
நீ செய்த தந்திரம்
நிற்காமல் சுத்துதே
நெஞ்சென்னும் பம்பரம்
உன் மாயம் உன் ஜாலம்
எல்லாம் எந்தன் மீதா

காதலெனும் வாசம்
வீசும் வீசும் உன் உள்ளம்
காலம் இனிதாக அங்கு
நீதான் வாழ்ந்திட வேண்டும்
எங்கேயோ போகும் நீ
இங்கே ஏன் நிற்கின்றாய்
முன்னாலே என்னாலே
வேறெதுவும் தான் ஆகாதே
நீ போடும் மாலைக்கு
நான் போகும் பாதைக்கு
அன்பென்னும் லீலைக்கு
பொன்னான நாளைக்கு
கைகோர்த்து செல்வோமா
கண் முன்னே வாடா


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரியதர்ஷினி


என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ
மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா
என கேட்கத் தோன்றுதே

(என் சுவாசத்தில்)

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர்வரையிலும் பார்வைகள் பாய்கிறதே
அன்பே.. அன்பே…

என் உள்ளம் எண்ணம் தேகம்
ஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே


ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்
மணிகணக்கினில் மௌனத்தைப் பேசிடலாம்


இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா


என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா என கேட்கத் தோன்றுதே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், கல்யாணி
திரைப்படம் : ஜெர்ரி
இசை: ரமேஷ் வினாயகம்கள்வனே கள்வனே - மேகா

raaga.com : Kalvane Kalvane

கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்

பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச
நாம் பேச

காதலாகி காற்றிலாடும் மேகமானேனே
விண்ணோடு சென்றேனே
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே
உன் கையில் வந்தேனே
வேறாரும் போகாத பூமி
காணாத வானம்
போகாத பூமி
காணாத வானம்
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்
காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்

நூறு நூறு(?) வானவில்லில் என்ன வண்ணங்கள்
நெஞ்சோடு கொஞ்சாதோ
வேறு வேறு பார்வையென்றும்
வீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கோ
தாங்காத தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீராத தாகம்
கொண்டாலே பாவை
ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்

கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஹரிசரண், ரம்யா NSK

ஜீவனே ஜீவனே - மேகா

 raaga.com - Jeevane Jeevane

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே பாதைகள் நீளுதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்

தீபமென சுழலும் விழிச்சுடரொளியே
உனை காற்றினிலும் அணைய விடமாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விடமாட்டேன்
எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னைப் பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும்போதும் உன்னைத் தேடுவேன்

கருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென
என் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக
உன்னைக் கண்டேன் கண்மணி
சோகம் நின்றே நின்று போக
வந்து சேர்த்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே

தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்
காதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி?!


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநிபாரதி
பாடியவர்: இளையராஜா

செல்லம் கொஞ்சும் பூவே - மேகா

raaga.com : Chellam Konjum Poove

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளித் தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரைத் தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலாவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கிப் பார்க்கலாமா


பூக்கள் உதிர்கின்ற நிழற்சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழைப் பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்
என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம் 
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன
எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சுக்குழலுக்குள்ளே
வந்து இரவின் ராகம் பாடு
என்னில் உன்னைத் தேடு

காலை பனி போல உன் ஞாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்
என் கனவின் அழகையெல்லாம்
நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகளெல்லாம்
நீ சொல்லித் தந்ததென்ன
இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
வானவில்லின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநி பாரதி
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

Tuesday, September 10, 2013

முகிலோ மேகமோ - மேகா

raaga.com : Mugilo Megamo - Yuvan Shankar Raja, Ramya NSK
raaga.com : Mugilo Megamo - Ilayaraaja

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்றுதானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனமெனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையை வீசும்
விரல்களை இதயமே விரும்பியே சேரும்
காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே

கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலையே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயேதான்


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே

மழையே மழையே 
தூரத்திலிருந்து நனைக்காதே
மனதில் நுழைந்து ஒவ்வொரு 
அறையாய் திறக்காதே

அலையே அலையே
அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே


இதழில் இதழால் கிறுக்காதே 
இமையைக் கனவால் நொறுக்காதே
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே

(மழையே மழையே )
ஆண் ஒரு கரை தான் 
பெண் ஒரு கரை  தான்
காதல் நதியாய் நடுவினில் வந்து
இணைக்கிறதே இணைக்கிறதே
ஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்
அதை விட மௌனம் பேசும் பாஷை 
பிடிக்கிறதே  பிடிக்கிறதே

புதிதாய் வருதே பூ வாசம் -அடடா 
எனக்குள் உன் வாசம் - இது
அன்பால் எழுதும் இதிகாசம் - நாம்
பூப்பது  எங்கோ புது நேசம் - இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

(மழையே மழையே)

மேல் இமை அழைக்க
கீழ் இமை தடுக்க
இது தான் காதல் கண்ணில்
நடத்தும் கலவரமா கலவரமா

பூ இதழ் துடிக்க 
வேர்வரை வெடிக்க
வெட்கம் நாணம் அச்சம்
இனிமேல் துணைவருமா துணைவருமா

மயக்கம் எதிரே வலைவீசும்
தயக்கம் உடனே தடை வீசும்
இனி தினமும் கரையில் அலைவீசும்
அந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்
இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

பாடியவர் : ஆண்ட்ரியா
திரைப்படம் : இருவர் உள்ளம்
இசை: விஜய் ஆண்டனி

Last 25 songs posted in Thenkinnam