Wednesday, September 18, 2013

பாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி



நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கை ர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே!

பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிபபானே!


என்ன விட்டு
வேற ஒன்ன
தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற?

பூவை விட்டு பூ தாவும் வண்டு
வாசம் பத்தி ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க உன்னைத்தான் தேடும்
யாரப் பாத்து நீயும்
இந்த கேள்வி கேக்குற?

வெக்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே!
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்!
கத்துத்தர வேற பொண்ண பார்!

அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்?
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்!

நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே!

பாம்பாம்பாம் நீயும்
பாம்பாம்பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே!


படம்: பிரியாணி
இசை: யுவன் ஷஙகர் ராஜா
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_1.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Last 25 songs posted in Thenkinnam