Wednesday, March 21, 2012

அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே

அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே

உன் காதல் சரம் என் மீதினில்
என் காதல் மனம் உன் மீதினில்
விண்மீதே இருள் தான்
நாடுதே (விண்மீதே)
ஆ என் செய்வேன்
நினைவே தேடுதே
(அன்பே வா)

ஓ வழிக்காணேன் பூமி மீதில்(2)
வந்து காண்பாய் நீயே கனவில்(2)
(அன்பே வா)

இன்று என் தாபம் தன்னை
பார்க்கவா
உன்னை நீ நாடி
என்னைப்பார்க்கவா
முன்னம் நீயே பார்க்காத
வேடிக்கை
மூச்சு போகின்ற விந்தை
பார்க்கவா

திரைப்படம் : அவன்
பாடியவர்: ஏ.எம்.ராஜா, ஜிக்கி
வரிகள் : கம்பதாசன்
இசை: ஷங்கர் ஜெய்கிஷன்
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD2037'&lang=ta

Sunday, March 18, 2012

நீராடினோம் யமுனை நதிக்கரையில்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDHI0224'&lang=en

ஸகமப மப மபா
மப த நீ தபமகரிஸா ..நித ப
நீராடினோம் யமுனை நதிக்கரையில்
உறவாடினோம் மதுர மதனபுரியில்(நீராடினோம்)
இனிக்க இனிக்க உன் சொல் கேட்கவே - கண்ணா
நினைக்க நினைக்க என் மனம் ஏங்குதே
(நீராடினோம்)
ரீரி ரிகரி ஸநிசா நிசநீ தநீத
பமகம பதநீ ஸா
மபபம தத பம ததபம நிநித ஸநிதபம மகரிகஸா
க .. ரிகரிரி ஸநிஸஸ நிஸநீ நீ நீ ஸநிஸஸ நிஸநிநி தநிதப ரீ
ரீ ஸநிஸஸ
கமபமக கமபம கமகரிஸா

கண்ணா ஆ ஆ
கண்ணா ஆ ஆ
வண்ண மலர் துளித்தேனும்
மார்புக்கு அழகாச்சு
எனக்கொரு மாலை சூட
உனக்கேனோ தயக்கம்
கண்ணின் மையினை எடுத்தேனும்
திருஷ்டிக்கு பொட்டாச்சு
எனக்கொரு மெட்டியிட உனக்கேனோ வருத்தம்

தீராத விளையாட்டு பிள்ளை - கண்ணா
தீராத விளையாட்டு பிள்ளை
உன் கண்ணாமூச்சி ஆட்டம் தானே
எனக்குத் தொல்லை
(நீராடினோம்)

ஸாஸஸரீர்ரீ கமகரிஸா
மாபாபப ததத நிஸநித ஸா
ரீ ரீரீ ஸாஸாநித
மபதப கமபமகம
ரிகமகரிகஸா


மார்கழித்திங்கள் பனிவிழும் மாலையில்
ஆயர்பாடியில் தனிமையில் நான் நின்றேன்
ஸரிகமப ஸரிகமப
ஸரிகம பதபம கமபதப
வெண்ணெய் திருடிய கண்ணன் தானே
சலனமில்லா என் இதயத்தைத் திருடிவிட்டான்
கமபத நிதபத கமபதப
ரிஸநிநி தநிதத ப்மகமப
காதல் மன்னன் லீலை இது
தொலைத்தவள் நானோ என்ன செய்வேன்
திருடிய முழியால் தவித்து நின்றான்
கள்வன் அவன் தானே
காட்டிக்கொடுத்திட மனமில்லை
அது என்னிடம் இருந்தால் தானே

தீராத விளையாட்டுப் பிள்ளை- கண்ணன்
தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த மாயவித்தையை செய்வதில்
அவனுக்கு நிகராய் எவருமில்லை
இந்த மாயவித்தையை செய்வதில்
அவனுக்கு நிகராய் எவருமில்லை

(நீராடினோம்)பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை:தீனா
திரைப்படம்:இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்

ஆத்தாடி மனசுதான்


ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே
அடடா இந்த மனசு தான்
சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே
அழகா இந்தக் கொலுசு தான்
தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே


ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே


        கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்டத்தட்ட கண்ணு வேர்த்துப் போகும்
மூச்சே காச்சலா மாறும்...ஓஹோ
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம்
இந்தக் காத்தில் வீசுது- விழி 
        தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்சே
உந்தன் பேர சொல்லிக் கொஞ்ச
அவளக் கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா...

          ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல  ஒஹோ
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் எல்லாம் அவள
பாத்தே வாழணும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகணும்
ஒன்னத் தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்கத் தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா
பாடியவர்: கார்த்திக்ராஜா
இசை:யுவன் சங்கர் ராஜா
படம் : கழுகு 
வரிகள் : நா. முத்துக்குமார்Tuesday, March 13, 2012

பாதகத்தி கண்ணு பட்டு

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாராங்கல்லு ரெக்க கட்டி பறக்குதடி எட கொறஞ்சி
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே

நீ சிரிக்கும் பொது, எம் மனசு வழுக்குதே
உன்கிட்டக் கெஞ்ச, என்னோட நெஞ்ச, என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன், கற்பூரக் கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

மனசு முழுக்க ஆச, என்னடி நானும் பேச
நாக்குக்குள்ள கூச, தடுமாறிப்போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்ச நானும்தான்
காத்தாக என்ன உரசி சாச்சிபுட்ட நீயும்தான்

உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
உம் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிக்கிட்டேன் நான்

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

அழுக்கா கெடந்த மனச, நீயும் இறங்கி அலச
மறந்து நிக்குறேன் பழச புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறன் நானும்தான்
அங்கேயும் உன் நெனப்ப, அனுப்பி வைக்குற நீயும்தான்

நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே
உன் கூட நதி போல நதி போல காலம் ஓடுதே

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாராங்கல்லு ரெக்க கட்டி பறக்குதடி எடை கொறைஞ்சி
பட்ட மரம ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே

நீ சிரிக்கும் போது, எம் மனசு வழுக்குதே

உன்கிட்ட கெஞ்ச, என்னோட நெஞ்ச, என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன், கற்பூர கண்ணே என்னடி பண்ண சொல்லு சொல்லு
இசை: யுவன் சங்கர்
பாடியவர் : யுவன் சங்கர்
படம்: கழுகு
பாடலைக்கேட்க ..
http://s02.download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kazhugu/Paathagathi%20Kannupattu%20-%20TamilWire.com.mp3

மழையும் நீயே வெயிலும் நீயே

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் -இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா

(மழையும்)

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

(மழையும்)

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

(மழையும்)

படம்; அழகன்
இசை: மரகத மணி
பாடல்: மழையும் நீயே வெயிலும் நீயே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam