Tuesday, August 26, 2008

661. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

(ராஜாவின்)

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்

(ராஜாவின்)

ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் மலர்ந்தேன்

(ராஜாவின்)

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்

(ராஜாவின்)




படம் : அன்பே வா
பாடல் : டி.எம்.எஸ்
தொகுதி : எம்.ஜி.யாரின் காதல் கீதங்கள்

1 Comment:

முகவை மைந்தன் said...

பாடலுக்கு நன்றி jeeves. மிக விரும்பிக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்து இளஞ்சிட்டுகளின் கனவுப் பாடல் என்று நினைத்துக் கொள்வதுண்டு ;-)

Last 25 songs posted in Thenkinnam