Friday, November 2, 2007

2. புத்தியுள்ள மனிதர் எல்லாம்.....

மறைந்த நடிகர் சந்திரபாபு அவர்களின் இந்த பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று. மிகவும் எதார்த்தமான வார்த்தைகளில் அமைந்த பாடல் என்பதாலும் மட்டுமில்லாமல் தோல்வி அடையுறப்போ கேட்டா நாமே தோத்து போற அளவுக்கு முட்டாள் இல்லைன்னும் நம்பிக்கை வர வைக்கிற பாட்டு இது. அதேபோல் வெற்றியொன்றை அடைந்து அதுனாலே தலைக்கனம் ஏறும் பொழுது சட்டென்னு தன்னிலை புரியவைக்கிற வரிகளும் உள்ளது.....



புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை...
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..
பணமிருக்கும் மனிதரிடம் மனம் இல்லை...
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பது இல்லை...

6 Comments:

வெட்டிப்பயல் said...

நல்ல பாடல்..
எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

MyFriend said...

//புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை...
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..
பணமிருக்கும் மனிதரிடம் மனம் இல்லை...
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பது இல்லை...//

இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் நினைவில் வரும் இன்னொரு பாடல்:

கடவுள் ஒருநாள் மனிதனைக்காண தனியே வந்தாராம்..
வழியில் காணும் மனிதனை எல்லாம் நலமா என்றாராம்...

thirumoorthy.k said...

பாடலே கேட்கேவேண்டும்

cheena (சீனா) said...

சந்திர பாபுவின் தத்துவப் பாடல்களில் இதுவும் ஒன்று. அக்காலத்தில் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல்.

Anonymous said...

கால காலங்களைத் தாண்டி இதுபோன்ற பாடல்கள் வாழ்கின்றன என்று சொன்னால் அவை வெறும் வரிகளல்ல.. வாழ்க்கைப் பக்கங்கள்.. அனுபவச் சாறுகள்! அறிந்தளித்த அமுதமொழிகள்!
வழங்கியவன் கண்ணதாசன்! அவர்தம் நீடுபுகழ் வாழ்க! வாழ்க!!
காவிரிமைந்தன் kmaindhan@gmail.com
அபுதாபி

LEO PRABHU said...

very excellent song.....

Last 25 songs posted in Thenkinnam