Get Your Own Music Player at Music Plugin
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
(தேனே)
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனே)
பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)
படம் : உதயகீதம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா
Wednesday, November 28, 2007
28. தேனே தென்பாண்டி மீனே
பதிந்தவர் இம்சை அரசி @ 6:18 PM
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ஜானகி
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
அருமையான பாட்டு.
ஆமாம் அதென்ன யேசுதாஸ் அவர்களின் பாடல்கள் இல்லாமல் ஒரு தேன் கிண்ணமா?
புதுகைத் தென்றல்
ஏற்கனவே யேசுதாஸ் அவர்களின் பூவே செம்பூவே பாடல் போட்டு இருக்கோமே, பாடல் எண் - 21
இருந்தும் நீங்க கேட்டுட்டீங்கள...
நாளைக்கு ஒரு பாட்டு போட்டு விடுவோம்.
அருமையான தேன் கிண்ணம் சார். ஆஜாகுபான ஜாம்பவான்களீன் குரல்களை விதவிதமான சுவைகளில் கேட்டு மிகிழ அற்புதமான தளம். நானும் மற்ற்றும் எல்லோரும் நான் விரும்பிய தேர்ந்தெடுத்து ஒரு மணிநேரம் அரைமணி நேரம் ஓடும் பாடல்கள் தளம் ஒன்று பதிய ஆசை. உங்கள் தேன்கிண்ணம் அந்த ஆசையை அதிக மாக்கிவிட்டது. வாழ்த்துக்கள்.
`
Post a Comment