ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..
(ஒவ்வொரு..)
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..
மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
(மனமே..)
(ஒவ்வொரு..)
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..
(மனமே..)
(ஒவ்வொரு..)
(மனமே..)
படம்: ஆட்டோகிராஃப்
பாடியவர்: சித்ரா
இசை: பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா. விஜய்
பாடலை விரும்பி கேட்டவர்: நிலா அரக்கி
Tuesday, November 27, 2007
24. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நிலா அரக்கி,
உங்கள் request நிறைவேற்றப்பட்டுவிட்டது. ;-)
அருமையான பாடல், இசை, வரி, குரல்... இன்னும் அடுக்கிட்டே போகலாம் இந்த பாடலை பற்றி. :-)
//மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்//
aroumaiyane varthaigal.
kettadoum oudane
padal pottadarkou
nandri.
மை பிரண்ட்
அருமையான பாடல்.
எல்லா விபரமும் தந்துள்ளீர்கள், பாடலாசிரியர் தவிர..
தயவு செய்து இப்பாடலில் வெற்றிக்கு
அந்த எழுதே காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
இப்பாடலை சித்ரா பாடாமல் மைபிரண்ட் பாடினால் கூட பா.விஜேயின் எழுத்தால் புகழ் ஆகியிருக்கும்.
கண்ணதாசன் காலத்தின் பின் வந்த
நல்ல அறிவுரை ,தன்னம்பிக்கை ஊட்டிய பாடல்.
இனிமேல் கட்டாயம் பாடலாசிரியர் பெயரையும் போட்டு அவர்களையும்
சிறப்பிப்போம்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
மை பிரண்ட்
அருமையான பாடல்.
எல்லா விபரமும் தந்துள்ளீர்கள், பாடலாசிரியர் தவிர..
தயவு செய்து இப்பாடலில் வெற்றிக்கு
அந்த எழுதே காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
இப்பாடலை சித்ரா பாடாமல் மைபிரண்ட் பாடினால் கூட பா.விஜேயின் எழுத்தால் புகழ் ஆகியிருக்கும்.
கண்ணதாசன் காலத்தின் பின் வந்த
நல்ல அறிவுரை ,தன்னம்பிக்கை ஊட்டிய பாடல்.
இனிமேல் கட்டாயம் பாடலாசிரியர் பெயரையும் போட்டு அவர்களையும்
சிறப்பிப்போம்.
//
மிகவும் தெளிவான / சரியான வார்த்தை. பாடலாசிரியர் பா.விஜயின் பெயர் சேர்த்தூவிட்டேன் யோகன் அண்ணா. :-)
Post a Comment