Saturday, November 10, 2007

7. அந்தி நேரத் தென்றல் காற்று




அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

5 Comments:

Baby Pavan said...

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ம்ம்ம்ம்....சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

குமரன் (Kumaran) said...

சிறுவனாக இருக்கும் போது விரும்பிக் கேட்டப் பாடல் இது சிபி.

Unknown said...

சிபி,

நல்ல பாட்டுக்கள்!! குமரன் சொல்றாரு, சிறுவனா இருக்கும்போது கேட்டாருன்னு.
ரொம்ப சின்னப் பையன் போல இருக்கு :)

Ungalranga said...

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!


எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு...
நெஞ்சை தொட்ட வரிகள் இவை.

cheena (சீனா) said...

பாடல் வரிகள் சிந்தையைத் தூண்டி மனதைத் தொடுகின்றன

Last 25 songs posted in Thenkinnam