Sunday, February 1, 2009

922. ஆவாரம்பூ அந்நாளிலிருந்தே யாருக்கு காத்திருக்கு?

ஆவாரம்பூ அந்நாளிலிருந்தே
யாருக்குக் காத்திருக்கு?
அந்திப்பகல் மழைவெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு!

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை- அது
சொல்லாமல் போனாலும் புரியாதா? ஆ...
ஆவாரம்பூ அந்நாளிலிருந்தே
யாருக்கு காத்திருக்கு?
அந்திப்பகல் மழைவெயில் சுமந்தே
உனக்காகப் பூத்திருக்கு!

காற்றிலாடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா!
குழந்தைக்கால ஞாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா!
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்- தினம்
சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தையெல்லாம் மௌனமாகும்

(சொந்த வேரோடு)

ஆயுள் முழுதும் தவம்கிடந்தே
ஒற்றைக்காலில் நிற்குதடா!

மாலையாகி தவழ்ந்திடுவே
உனது மார்பை கேட்குதடா!
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்
அதன் வாசங்கள் எல்லாம்நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப்போகும் ( சொந்த வேரோடு)

பாடியவர்: சின்மயி
இசையமைத்தவர் : எஸ் எஸ் குமரன்

2 Comments:

M.Rishan Shareef said...

ஏனோ தெரியலை..காலையிலிருந்து இந்தப் பாடல் மனசுக்குள் ஒலிச்சிட்டே இருக்கு..இப்போ இங்கேயும் :)

வசனங்களைத் தந்தமைக்கு நன்றி !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ரிஷான்.. காலையில் எதாச்சும் ந்ல்ல பாடலை கேட்டோம்ன்னா சில சமயம் ஒரு நாள் முழுக்க அதுவே மனசுக்குள்ள சுத்திட்டே இருக்கும்.. :)

Last 25 songs posted in Thenkinnam