ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்குள்ளே போராட்டம் கண்ணில் இந்த நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)
உன்னை வெல்ல யாருமில்லை உருதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுத்தோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா? துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே..)
படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சித்ரா
Saturday, February 14, 2009
946. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment