Wednesday, September 2, 2009

நான் காணும் உலகங்கள்



நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்
நான் காணும் உலகங்கள்
யார் காண கூடும்

சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே
மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே
என்னை காணும் அன்னை பூமி
உன்னை காணவே இங்கே
வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம்
வானம்பாடி போலே பாடும்
வாழ்க்கை என்றுமே வேண்டும்
நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்

பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை
அதில் புன்னகை மனம் அறிவேன்
கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை
கை தொட்டதும் உணர்வறிவேன்
குக்கூவென கூவும் குயிலகளின்
கூட்டத்தில் நான் இணைவேன்
கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை
ரெக்கை விரித்திடுவேன்
உங்கள் முகம் பார்த்ததில்லை
வரைந்ததில்லை நான்
என் முகத்தினை நீங்கள் எல்லாம்
பார்த்ததினால்தான்
உங்கள் மேடை பாடல் நான் ஓ
(நான் காணும்..)

ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளை
பூத்தது பல நினைவு
கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட
சுற்றி வரும் கனவு
கற்றவர் பேசிட காதில் கேட்டதில்
பெற்றதெல்லாம் வரவு
வாட்டிய வருமையில் எனக்குள் திறந்தது
கற்பனையின் கதவு
வாழ்விலே நான் கண்டுகொண்டேன்
தேடல்தானே
வாழ்க்கை பாடும் பாடினிலே
பாடகன் ஆனேனே
பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓ
(நான் காணும்..)

படம்: காசி
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam