Thursday, September 10, 2009

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்( பொன்னையே)
பின்னையே நித்ய கன்னியே (2)
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ (2)
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
இசை : எம்.எஸ் வி
பாடியவர்: ஜேஸுதாஸ்
திரைப்படம்: கண்ணே கனியமுதே

7 Comments:

ஆயில்யன் said...

பாரதியார் பாடல்கள் அதை ஜேசுதாஸ் குரலில் இளையராஜாவின் இசையில் கேட்டு மகிழ்வது அற்புதம் :)

Unknown said...

இசை : இளையராஜா அல்ல.
எம்.எஸ்.விஸ்வநாதன்.

கல்யாண வசந்தம் ராகத்தில் போட்ப்பட்ட பாட்டு.”காஞ்சிப் பட்டுத்தி
கஸ்தூரி” பாட்டும் அதே ராகம்.

கானா பிரபா said...

கலக்கல் பாட்டு

☼ வெயிலான் said...

கேட்கச் சலிக்காத பாட்டு.

நன்றி!

Sethu Subramanian said...

சகியென்று ----> சசியென்று (சசி = சந்திரன் )

Unknown said...

சகி = தோழி

Sethu Subramanian said...

The second line is not as written. தன்னையே சகியென்று is wrong. >>>>> தன்னையே சசியென்று . சசி means moon. Please read my article on this song here: https://periscope-narada.blogspot.com/2015/07/ninnaiye-rathi-enru.html

KaNNammA is the imaginary love-girl of Bharathi. So when he addresses her as "rathi" in the first line he would not call her in the next line as "saki". Please refer to BharathiyAr kavithaigaL for the correct version as "sasi" and not "saki"

Last 25 songs posted in Thenkinnam