Thursday, September 24, 2009

வெள்ளிமலை மன்னவா



எஸ்.வரலட்சுமி

பழம்பெரும் நடிகை, பின்ணனி பாடகி அமரர் எஸ்.வரலட்சுமி அவர்கள் 22.09.09 அன்று சென்னையில் காலமானார் அவர்களீன் ஆத்மா சாந்தியடைய தேன் கிண்ண நேயர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவருடைய கணீரென்ற குரலுக்கு அடிமையாகதவர் யாரும் இலர். இந்த பச்சைகுழந்தைக்கு என்ற பாடல் அனைவராலும் கவர்ந்தது. இதோ இந்த ஒலிதொகுப்பு வானொலியில் ஒலிப்பரப்பட்டது அதை பதிவு செய்து உங்களூக்காக வழங்குகிறேன். இந்த சிறிய ஒலித்தொகுப்பை எஸ்.வரலட்சுமி அவர்களின் தீவிர ரசிகர் திருப்புர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இந்த ஒலித்தொகுப்பின் மூன்று முத்தான பாடல்களூம் என்னை கவர்ந்தது.

சிங்கார கண்ணா உன் >> ஏடுதந்தானடி >> வெள்ளிமலை மன்னவா

Get this widget | Track details | eSnips Social DNA



மேலே உள்ள பாடல்கள் மற்றும் தகவல்கள் பதிவிறக்கம் இங்கே

11 Comments:

butterfly Surya said...

அஞ்சலி...

பகிர்விற்கு நன்றி.

Thangamani said...

எஸ்.வரலட்சுமி அவர்களின் குரல்வளமும்,இனிமையும்
கேட்டு ரசித்தவர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.
இசைக்கென்றே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செய்வோம்.
அவருடைய குடும்பத்தார்க்கும்
நம் ஆறுதலைச் சொல்வோம்.

அன்புடன்,
தங்கமணி.

கோமதி அரசு said...

திருமதி.எஸ்.வரலட்சுமி அவர்களை
இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு
எங்கள் ஆறுதல்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.

எனக்கு அவர் பாடிய எல்லா பாடல்களும்
பிடிக்கும்.

நீங்கள் பகிர்ந்து கொண்டபாடல்கள்
மனதுக்கு சாந்தி அளித்தது.

நன்றி.

Anonymous said...

இசையன்பர்கள் பட்டர்ப்ளை சூர்யா, தங்கமணி மற்றும் கோமதி அரசு ஆகியோருக்கு வந்தனம்..

இசை ஜாம்பவான்கள் கே.பி.எஸ், சீர்காழி கோவிந்தராஜன் வரிசையில் அமர்க்களமான பாடகி அமரர் எஸ்.வரலட்சுமி அவர்கள் அதிகபட்சம் மொத்தம் 60 பாடல்கள் பாடியிருப்பார் அநேகமாக எல்லாமே உச்சஸ்தாயியில் பாடியிருக்கும் பாடல்கள். வானொலியில் இன்னும் சிறப்பாக பல பாடல்களை தந்திருக்கலாம் என்று எனது விருப்பம் ஒரு மணி நேர நிகழ்ச்சியில் ஐந்து பாடல்கள் தான் ஒலிப்பரப்பினார்கள் இன்னும் அதிகம் தேடி பிடித்து ஒலிப்பரப்பியிருக்கலாம். எனது திருப்பூர் அன்பர் அகிலா விஜயகுமார் மொபைலில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வருகிறது பதிவு செய்து இணையத்தில் வழங்குங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார் எனது வேலை இடையிலும் சிரமப்பட்டு பதிவு செய்த தொகுப்பு மூன்று பாடல்கள் மட்டும் இருந்தாலும் முத்தான பாடல்கள். மூன்று பேரும் அஞ்சலி செய்தி வழங்கி எனக்கு உற்ச்சாகம் ஏற்படுத்தியதற்க்கு நன்றி.. நன்றி... நன்றி.

Anonymous said...

வரலட்சுமி அம்மாவின் குரலும் அம்சமான அந்த முகமும் வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று. தேனிசை குரலின் மயக்கம் கேட்க கேட்க திகட்டாது. தமிழ் திரை வானில் உதித்த அபூர்வ விண்மீன்களில் குறிப்பிடத்தக்கவர். சொந்த குரலில் பாடி நடித்த நடிகைகளில் எல்லோருக்கும் பிடித்தவர் நமது வரலட்சுமிஅம்மா ! தெய்வீக பாடல்கள் பாடி கவர்ந்தவர் K B சுந்தராம்பாள். அனைத்து விதமாய் பாடி ஈர்த்தவர்
S வரலட்சுமிஅம்மா ! தமிழ் திரை ஓவியங்களில் அன்னாரது வர்ணம் தனித்திருக்கும்.

ஜெகதீஷ்
கோவை 24

Anonymous said...

தங்கள் தகவல்களையும் இங்கே சேர்த்ததற்க்கு மிக்க நன்றி ஜெகதீஸன் சார்.

anbuchezhian said...

”இந்த பச்சைக்கிளிக்கொரு” என்று அனைவரையும் தாலாட்டிய குயில் மறைந்து விட்டது. நண்பர் இரவிக்கு என் நன்றி!
-அன்பு

Anonymous said...

அன்பு செழியன் சார்..

//”இந்த பச்சைக்கிளிக்கொரு” என்று அனைவரையும் தாலாட்டிய குயில் மறைந்து விட்டது. நண்பர் இரவிக்கு என் நன்றி!//

நீங்கள் கேட்ட பாடல் அவர்கள் ஒலிபரப்பியிருக்கலாம் அவசரத்தில் ஒலிப்பரப்பட்ட நிகழ்ச்சியாதலால் விடுபட்டு போயிருக்கும். உங்கள் அஞ்சலிக்கு நன்றி சார்.

Unknown said...

s.varalakshmi
peyaril lakshmi irunthalum unmayil gana saraswathi nadipil athi parasakthiyai kandu paravasam adainthean thayea un padalgalai keatu envasam ilanthean sevasathanam padathil arambithu 1990 velivantha guna ellam ayyapan ponra padangalil varai thanthu vithiyasamana nadipinalum padalgalinalum en manthai akiramitha oru arputha unnatham s.varalakshmi

Unknown said...

s.varalakshmi
peyaril lakshmi irunthalum unmayil gana saraswathi nadipil athi parasakthiyai kandu paravasam adainthean thayea un padalgalai keatu envasam ilanthean sevasathanam padathil arambithu 1990 velivantha guna ellam ayyapan ponra padangalil varai thanthu vithiyasamana nadipinalum padalgalinalum en manthai akiramitha oru arputha unnathamivarathu kuralil nan keata muthal padal intha pachai kilikoru appoluthu vayathu enaku nalu andru muthal indru varai ini endrum en atharsa padagi s. varalakshmi thaan

nenjirukum varaikum un nenaivirukum
antha nenaivinil unthan mugam
endrum nirainthirukum

thayea unathu maraivu enaku eedu seiya mudiyatha pearilapu ungalai ilanthu vadum thangalathu kudumbatharuku allntha irangalai theruvithu kolgirean
unthan athma santhi adaya andavanai veandi kolginrean

program veliyita nanbar kovai raveeku nandri

manathil baramudan
akila vijayakumar

Anonymous said...

வாங்க அகிலா விஜயகுமார் அவர்களே..

கார்த்திக் என்ற முகவரியில் தங்களின் உன்னதமான உணர்வுகளை வரி வடிவமாக தந்துள்ளீர்கள் அதுவும் வரலட்சுமியம்மாவின் அற்புத தகவல்களூடன். வரலட்சுமி அவர்களின் தீவிர ரசிகராகிய தங்களையும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராய் பாவித்து தங்களின் வருத்தத்திலும் பங்கு கொள்கிறேன் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தேன் கிண்ண நேயர்களூடன் சேர்ந்து வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. அடிக்கடி வாங்க. திரு கார்த்திக் அவர்களின் மின் முகவரி தாருங்கள் இன்னும் பதிவுகள் சுட்டி தங்களூக்கு அனுப்பி வைக்கப்படும்.

Last 25 songs posted in Thenkinnam