Thursday, March 14, 2013

ஆயிரம் மலர்களே மலருங்கள்



ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ 
நெருங்கி வந்து சொல்லுங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ



படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்; ஜென்சி, SP.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்

3 Comments:

pudugaithendral said...

ஜென்சி குரலில் இனிமையான பாடல்கள்.


நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்.... அருமையான பாடல் வரிகள்,

பகிர்வுக்கு நன்றீஸ்

Unknown said...

80- களில் இளையராஜாவால் இரு இனிய இசை மலர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் ஜென்சி மற்றவர் SP.ஷைலஜா. இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான
ரசனை உண்டு.
ஜென்சி பாடிய............என் வானிலே ஒரே வெண்ணிலா .....................
ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................
இரண்டு பாடல்களும் வித்தியாசமான இனிமைதான் . இருவரின் குரல்களில் ஒரு குழைந்தை தனம் இருக்கும் .
இருவரும் சேர்ந்து பாடிய ... ஆயிரம் மலர்களே மலருங்கள் .............பாடலும் இனிமைதான்
இவ் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலில் ..............
ஆரம்ப ஹம்மிங் SP . ஷைலஜா ஹா ஹா ..........என்று பாட தொடர்ந்து ஜென்சி ஆயிரம் மலர்கள் ...........என்று பாட அழகாக இருக்கும் . தொடர்ந்து ஜென்சி ...வானில்லே வெண்ணிலா .................என்று பாடுவார் .அதை தொடர்ந்து அடுத்த சரணம் SP .ஷைலஜா
கோடையில் மழைவரும் வசந்த காலம் ....................என்று பாடி முடிப்பார் . இருவரின் குரல்களும் இரு வேறு இனிமை
80 - களில் வானொலியில் ஜென்சி , ஷைலஜா பாடல்கள் வலம் வந்ததை மறக்க முடியவில்லை. இப்பொழுது கேட்கும் பொழுது பசுமை . காலத்தால் அழியாத இரு இசை குரல்கள் ஜென்சி , SP.ஷைலஜா
சமீபத்தில் நண்பிகளான ஜென்சி யும் SP.ஷைலஜா வும் - "இரு பறவைகள் " எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து இருவரின் 80-களில் உருவான இனிய பாடல்களுடன் - ஆயிரம் மலர்களே மலருங்கள் ...............பாடலையும் பாடினார்கள் .

uppili said...

மலேசியா வாசுதேவனை மறந்துவிட்டிர்களே?

Last 25 songs posted in Thenkinnam