Get Your Own Hindi Songs Player at Music Plugin
ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
(ரசிகா..)
ஓ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா
இவள் ரடக்கும் நடையிலே நிலம் சிவக்கும் அதன் மனம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வான்ம் விழா அது வானவில்லா?
இல்லை வசந்த விழா?
அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும்
நிலமெங்கே நிலமெங்கே இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
இவள் காதோரம் மானாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டிப் பிடிக்க மின்னல் வட்டமும் பிடித்து வலை வீசுதே
(ரசிகா..)
அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தைதான்
இன்னும் ஆக்ராவில் பலிங்கோடு ஒளிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆராமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சோப்பினி துவைக்கின்றதே
(இவள் காதோரம்..)
(ரசிகா..)
உலி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூரல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையில் தரும்
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்
படம்: ஸ்டார்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
Monday, July 21, 2008
575. ரசிகா ரசிகா என் ரசிகா
பதிந்தவர் MyFriend @ 5:30 PM
வகை 2000's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், சுஜாதா, வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment