Wednesday, July 23, 2008

588. இனி நானும் நான் இல்லை




இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போலே நானில்லை
முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி

நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்றே சொல்லை
தூக்கில் போட்டுக்கொள்ள
நீ வாராய்
புறை ஏறும் போதெல்லாம்
தனியே சிரிக்கின்றேன்
அது ஏனடி?
(இனி நானும்..)

உனது கன்னத்தில் குழியில் கட்டில் போட்டேனா
படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நீ
நான் விழுந்தேன்
கையில் கடிகாரம் இருந்த போதும் நீ என்னை
மணி கேட்டதில் அட
நான் விழுந்தேன்
ஒரு வார்த்தை பேசாமல்
புருவத்தைஅ நீ தூக்கி
ஒரு பார்வை பார்த்தாயே
அதில் தானே நான் விழுந்தேன்
என் பிறந்த நாள் வாழ்த்தை
சொல்லவே நீயும்
நள்ளிரவில் பரிசோடு
சுவர் ஏறி குதித்தாயே அப்போது
நான் விழுந்தேன்
எப்போது நினைத்தாலும்
இப்போது போல் தோன்றும் அன்பே
(இனி நானும்)

எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல்
வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா
போதும் போதாட ஆடை நீ அணிய
பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே
பசித்தாலும் உண்ணாமல்
தொலைப்பேசி பணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நானும்
(பசித்தாலும்..)
சில நாட்கள் வாழ்வோமா?
தினந்தோறும் சில ஊடல்
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்
(இனி நானும்..)

படம்: ஹேய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
இசை: ஸ்ரீநிவாஸ்
பாடியவர்கள்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ், சுனிதா சாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam