Thursday, July 31, 2008

632 சக்ஸஸ் சக்ஸஸ் லைஃபில் சக்ஸஸ்

தேன்கிண்ணம் குழுவின் தேனீ கப்பியின் பிறந்தநாளுக்கு சிறப்புப்பாடல்.

சக்ஸஸ் சக்ஸஸ்
லைஃபில் சக்ஸஸ் என்றும் நானும் பெறுவேனே
தொடவே தொடவே வானைத்தொடவே
என்றும் நானே பறப்பேனே - (சக்ஸஸ் சக்ஸஸ்)

கனவாய்த்தானே அன்றுவாழ்ந்தேனே
நிஜமாய்த்தானே இன்று பிறந்தேனே
உலகை நானே வென்றிடுவேனே (சக்ஸஸ் சக்ஸஸ்)

உளிகள் தாங்கும் பாறையே
சிலைகள் ஆகும் நண்பனே
வளையும் நதியே
கடலில் சேர்ந்திடுமே ஓஒ

தத்தித்தாவும் கடலலை
கரையைத்தொட்டால் கரைந்திடும்
மீண்டும் ஓரலை மறுபடி மோதிடுமே
வேருக்குத்தெரியாமல்-எந்த
பூவும் கிளையில் பூக்காது

பூமிக்குள் மறையாமல் ஒரு வைரம் இங்கே கிடையாது
பொறுமையினால் பூமி வென்றிடலாம்
போர்க்களத்தில் பூக்கள் பறித்திடலாம்
வியர்வைத்துளிகள் வெற்றிகள் தருமே (சக்ஸஸ் சக்ஸஸ்)


அன்னை தந்தையை வணங்கிடு
குருவும் தெய்வம் என்றிடு
வரலாறெங்கும் உன் பேர் நிலைத்திடுமே
அறிவின் திரியை கொளுத்திடு
அன்பின் தீபம் ஏற்றிடு
ஆகயத்திலும் உன்புகழ் சென்றிடுமே
தலைகீழாய் பிடித்தாலும்-நாம்
நேராய் எறியும் தீயாவோம்
துயரங்கள் வதைத்தாலும்-நாம்
தோல்விக்கு தோல்வி தந்திடுவோம்

பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
உள்ளங்கையில் தண்ணீர் கொண்டு செல்லலாம்
மின்னலைப்பிடித்து
விண்ணில் செல்வோமே (சக்ஸஸ் சக்ஸஸ்)

திரைப்படம்: அந்த நாள் நியாபகம்
பாடலைப்பாடியவர்: கார்த்திக்
இசையமைத்தவர்: பரத்வாஜ்
பாடலைஇயற்றியவர்: நா.முத்துக்குமார்.

5 Comments:

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அறிவுஜீவி அப்பு. :-)

pudugaithendral said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி.

cheena (சீனா) said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - கப்பி

கப்பி | Kappi said...

நெஞ்சார்ந்த நன்றிகள்! :)

யட்சன்... said...

நம்ம ஜூனியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

“நல்லா இருப்ப ராசா”

Last 25 songs posted in Thenkinnam