பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
(பொய் சொல்ல..)
நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே
(பொய் சொல்ல..)
உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும்
மரம் சொல்லுமே
(பொய் சொல்ல..)
படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: தாமரை
Wednesday, July 16, 2008
557. பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
பதிந்தவர் MyFriend @ 9:00 AM
வகை 2000's, தாமரை, யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment