Tuesday, July 8, 2008

547. காவியமா நெஞ்சின் ஓவியமா

படம் : பாவை விளக்கு
குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா
பாடல் : மருதகாசி
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்
விரும்பிக் கேட்டவர் : நீல் மணி (Neel Mani )

காவியமா நெஞ்சின் ஓவியமா - அதன்
ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா

(காவியமா)


மொகலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த
முகத்தோடு நினைவில் பொங்கும் ரூபமே
மும்தாஜே....ஏ...
மும்தாஜே முத்தே என் பேகமே - பேசும்
முழுமதியே என் இதய கீதமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே

(காவியமா)

என்னாளும் அழியாத நிலையிலே - காதல்
ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்தக் கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மைக் காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

(காவியமா)

2 Comments:

முகவை மைந்தன் said...

அருமையான பாடல். இலங்கை வானொலி எங்கள் வீட்டின் மணி காட்டியாக இருந்த இளமைப் பருவம்... ம்ம்ம்..

முகவை மைந்தன் said...

அப்ப கேட்ட பாட்டுன்னு சொல்ல வந்தேன். நினைவலைல இருந்து எத்திரிக்க முன்னே பின்னூட்டத்தை அனுப்பிட்டேன். கிகிகிகிகி (ஹிஹி ன்னு வாசிக்கவும்.. கிகிகிகிகி)

Last 25 songs posted in Thenkinnam