காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே
(காதல் வைபோகமே)
கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு
(காதல் வைபோகமே)
எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாளம் தாபம்
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்
(காதல் வைபோகமே)
படம்: சுவரில்லாத சித்திரங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
Saturday, July 26, 2008
619. காதல் வைபோகமே
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:29 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
காதல் வைபோகமே" I LIKE THIS SONG. VERY NICE.
Post a Comment