ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
படம் : பாசம்
இசை : விஸ்வநாதன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள் : பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்
Thursday, July 3, 2008
542 - பால் வண்ணம் பருவம் கண்டு
பதிந்தவர் Iyappan Krishnan @ 5:27 PM
வகை 1960's, P சுசீலா, PB ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
Nalla irukku.
நல்ல பாட்டு...
புரட்சி நடிகருக்கு பிபிஎஸ் பாடிய இரண்டே பாடல்களில் ஒன்று இது. இன்னொன்னு எது தெரியுமா? (இரண்டுக்கு மேல் இருந்தால் சுட்டுங்கள், தெரிந்து கொள்கிறேன்.. கிகிகிகிகி)
கேள்வி கேட்டிருகேன்ல.. மறுமொழிகளை அஞ்சல்ல பெறுவதற்காக.. கிகிகிகிகி
திருடாதே படத்தில் என்னருகே நீயிருந்தால் பாடல்.
திருடாதே படத்தில் என்னருகே நீயிருந்தால் பாடல்
Post a Comment