Get Your Own Hindi Songs Player at Music Plugin
வானம் உள்ளவரை பூமி உள்ளவரை
காற்று உள்ளவரை கடல் உள்ளவரை
அக்னி சாட்சியாக நான் உன்னோடு இருப்பேன்
எங்காவது இனி எங்காவது
நீ சந்திக்க மறந்தால்
நான் என்னாவது?
சந்திக்க வேண்டும் ஒரு முறையாவது உன்னை ஹோ
சிந்திக்க வேண்டும் சில கனமாவது என்னை ஹோ
என் பேரை எழுதி பார்த்தேன் அதன் வார்த்தை நீ
நான் கோவில் போகும்போது என் தீபம் நீ
என் இரண்டு கண்ணில் தோன்றும் ஓர் பார்வை நீ
என் ஆயுள் காலம் எல்லாம் என் சுவாசம் நீ
(எங்காவது இனி..)
பாதி பார்வை பார்த்தாலே பத்திக்கொண்டு எறிவேனே
மீதி பார்வை பார்த்துவிட்டால் என்னவாவேன்
சுண்டு விரல் பார்த்தாலே சொட்டு சொட்டாய் கரைவேனே
பத்து விரல் தொட்டு விட்டால் என்னவாவேன்
என் சகியே என் சகியே இன்னமும் மௌனம் மட்டும் கூடாது
என் உயிரே என் உயிரே உன் காதல் இல்லையென்றால் நான் ஏது?
(எங்காவது இனி..)
உச்சி தொட்டு பாதங்கள் உச்சரித்து பார்த்தேனே
உன்னால் எந்தன் பெண்மை மெல்ல உணர்ந்தேனே
தித்திக்கின்ற தேகத்தில் கட்டெறும்பை மொய்ப்பேனே
கட்டளைக்கு கட்டுப்பட்டு வருவாயா?
யாசகனே யாசகனே நீ கேட்கும் யாசகத்தை தருவேனே
என் அழகே என் அழகே முத்தத்தால் உன்னை கொத்தி தின்பேனே
சந்திக்க வேண்டும் ஒரு முறையாவது உன்னை
சிந்திக்க வேண்டும் சில கணமாவது என்னை
(என் பேரை..)
(எங்காவது இனி..)
படம்: அன்பே உன் வாசம்
இசை: தீனா
பாடியவர்கள்: சுஜாதா, சங்கர் மகாதேவன்
Monday, July 21, 2008
571. எங்காவது இனி எங்காவது
பதிந்தவர் MyFriend @ 7:30 AM
வகை 2000's, சங்கர் மகாதேவன், சுஜாதா, தீனா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment