Anbe En Anbe - DhaamDhoom
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்றில் அடைமழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதியலையானாய்
நான் நான் அதில் விழும் நிலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொடப் பிழைத்திடுவேனோ
மழையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம்
மெளனத்திலே கலக்கும்
(அன்பே என் அன்பே)
நீ நீ ஒரு புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எது கொடுத்தோம் எது எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
(அன்பே என் அன்பே)
படம்: தாம்தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Monday, July 28, 2008
623. அன்பே என் அன்பே - தாம்தூம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:14 AM
வகை 2000's, 2008, நா. முத்துக்குமார், ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment