Wednesday, July 23, 2008

593. உனக்கென உனக்கென பிறந்தேனே




உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..)

படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam