Friday, July 25, 2008

608. சில்லென்ற தீப்பொறி ஒன்று



சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது ந்ஞ்சில் பார்த்தாயா?
இதோ உன் காதலன் என்று
விரு விரு விருவென கல கல கலவென
அடி மன வெளிகளில் ஒரு நொடி நகருது கேட்டாயா?
உன் மெத்தையில் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பன்ணுதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நா நா
(சில்லென்ற..)

கண்ணா உன் காலணியுள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தோய்வதும்
கண்ணா உன் காலுறை உள்ளே என் கைகள் நான் தோய்ப்பதும்
உள்ளூர தேன் பாய்வதும்
முத்து பையன் தேனீர் உண்டு மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும் கோபங்களும் ஓ..
(தித்திக்குதே..)

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அறைதனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும் நோய் கொண்டு நான் அழுவதும்
அக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ..
(தித்திக்குதே..)
(சில்லென்ற..)

படம்: தித்திக்குதே
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுஜாதா

1 Comment:

Natty said...

wow, nandri :)

Last 25 songs posted in Thenkinnam