எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த-நீ
எனைப்பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க-நான்
எனைத்தேடி எடுக்க
இன்பதுன்பம்
துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ எங்கிருந்து )
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை
ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா (எங்கிருந்து)
வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா? (எங்கிருந்து)
திரைப்படம் : 5 ஸ்டார்
பாடியவர்: சந்தனா பாலா
இசை : பரசுராம் ராதா
பாடல் இயற்றியவர்: தாமரை
Tuesday, July 15, 2008
555. எங்கிருந்து வந்தாயடா?
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:13 AM
வகை 2000's, சந்தனா பாலா, தாமரை, பரசுராம் ராதா
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
//ஒருவர் வாழும் உலகில்
மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு
இருவர் இணையும் போது///
அருமையான வரிகள் :)))))))))
இந்த பாட்டு பல முறை கேட்டு இருக்கேன். யார் பாடினதுன்னு தெரியாம. பாடலுக்கு நன்றி
நன்றி ஆயில்யன்
நன்றி சின்னம்மணி..
நானும்கூட இதனைபாடியது யாருன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்..:)
பாடல் அருமை:).
அருமை முத்துலட்சுமி.. :) மிக்க நன்றி.. எனக்கு மிகப்பிடித்த பாடல் இது.
இன்று கேட்கையில் திடீரென ஒரு சந்தேகம், "வானவில்லாய் ஆணும்.. xxx ய் பெண்ணும்.."
அது என்ன வார்த்தையெனப் புரியவில்லை. என்னன்னவோ யோசித்தேன்.. நிச்சயம் இணையத்தில் யாரேனும் பதிந்திருப்பர் என்று வந்தேன்.. தேடலின், முதல் முடிவே தேன்கிண்ணம் கிடைத்தது.. :)
இப்போ புரியுது.. தாமரை தி கிரேட்.. :)
Bee'morgan நன்றி....இப்படி எல்லாருடைய விருப்பங்களையும் முதல் முடிவாக இங்கிருந்தே பெறவைக்கவேண்டும் என்பதே குழுவின் குறிக்கோள்.
Post a Comment