இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
உன்னைப் பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே
கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே
உலகமே உன்னால் இன்று புதியதாய்
உணர்கிறேன் உற்சாகத்தை முழுவதாய்
என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்
(இது என்ன மாயம்)
நான் நேற்று வரையில்
பூட்டிக்கிடந்த ஜன்னலாய்த் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்
விழிகளை நீ மூடிவைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடிவைத்தால்
பயணங்கள் கிடையாதே
விரலோடுதான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனியில்லையே
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்
(இது என்ன மாயம்)
படம்: ஓரம் போ
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: சங்கர் மகாதேவன், அல்கா யாக்னிக்
Tuesday, July 29, 2008
630. இது என்ன மாயம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 5:43 PM
வகை 2000's, GV பிரகாஷ் குமார், அல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன், நா. முத்துக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment