நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
(நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...
படம்:- இராமு
பாடியவர்:- PB.ஸ்ரீனிவாஸ்
2 Comments:
இந்த பாடலையும் 'மலர்கள் நனைந்தன பனியாலே' இரண்டையும் மெட்டு மாற்றி சந்தம தட்டாமப் பாடலாம். நானே கண்டுபிடிச்சதாக்கும்...!
பல பாடர்களை உருவாக்கிய பாடல் :)
Post a Comment