Friday, December 4, 2009

நாணயம் - நான் போகிறேன் மேலே



நான் போகிறேன் மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாலியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் போலே

தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
(நான் போகிறேன்..)

கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அட என்னுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
எண்ணத்தைத் தேடும் பார்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான
ஹ்ம்ம்ம்ம் நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
உள்ளத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேன்
(நான் போகிறேன்..)

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

நானானனான நான நான
நானானனான நான நான
நானானனான நான நான

படம்: நாணயம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

4 Comments:

Anonymous said...

மைப்ரண்ட ஏற்கெனவே நான் பதிந்திருக்கேனே பார்க்கவில்லையா என்னோடதை தூக்கிடட்டுமா? இரண்டு பதிவாயிடுமே?

Anonymous said...

என்னோட பதிவை தூக்கிட்டேன். வாழ்த்துக்கள் மைப்ரண்ட் பதிவிற்க்கு நன்றி.

Unknown said...

Beautiful song....Superb melody...Naanayam songs...!!!!

Chentoo said...

1. நான் பூக்கிறேன் பன்னீர் 'பூ' போலே
2. உள் பக்கம் தாழ்ப்பால் போட்டும் அறையினுள்(xஅட என்னுள்x) நீ வந்தாய்

ரொம்ப நன்றி தோழா....

சிறு சிறு தவறுக‌ள்... திருத்தினால் நன்று

Last 25 songs posted in Thenkinnam