Saturday, July 18, 2009

மாலை நேரம் மழை தூறும் காலம்

blogger சோம்பேறி தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருடைய விருப்பப்பாடலாக இங்கே இப்பாடல் . பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோம்பேறி..

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என


ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)



இசை: GV ப்ரகாஷ்
திரைப்படம்: ஆயிரத்தில் ஒருவன் (2009)
பாடியவர்: அண்ட்ரியா

5 Comments:

☀நான் ஆதவன்☀ said...

எனக்கும் பிடிச்ச பாட்டு!

வாழ்த்துகள் சோம்பேறி.

rapp said...

அடடே சூப்பர்:):):)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோம்பேறி:):):) (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....திட்டுற மாதிரியே வாழ்த்தறேனோ:):):))

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சோம்பேறி!

♫சோம்பேறி♫ said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :-)

சென்ஷி said...

வாழ்த்து சொன்னது மொத்தம் மூணு பேரு. இதுல தனித்தனியா வாழ்த்து சொல்ல முடியாதோ.. அனைவருக்கும் நன்றியாமுல்ல நன்றி :)

Last 25 songs posted in Thenkinnam