ஜூலை மூன்றாம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் பதிவர் கோபிநாத் க்கு வாழ்த்துக்கள்..
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் (ஜீவநதியாய்)
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தவறினை)
தாயில்லாமல் நானில்லை
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள் (தூய)
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் (2)
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் (மேக)
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள் (மலைமுடி)
தாயில்லாமல் நானில்லை
ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான் (ஆதி)
அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை
பாடியவர் : டி.எம் .எஸ்
திரைப்படம் :அடிமைப்பெண்
Friday, July 3, 2009
தாயில்லாமல் நானில்லை
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:28 AM
வகை TM சௌந்தர்ராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))
தாய்மையின் வலிமையினை சொன்ன இன்னுமொரு பாடல் !
கவியரசரின் கவி வரிகளில் வாழ்க்கையினை தாய்மையின் பெருமையினை சொன்ன பாடல்
நன்றி :)
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கோபி!
அம்மாவின் புகழ் பாடும், வும் புகழ் பரவட்டும் :-)...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி :)))
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஆஹா.. வாத்தியாரோட அசத்தல் பாட்டு..
ஹேப்ப்பி பர்ர்த் டே கோபி :)
ஹாப்பி பர்த்டே அண்ணே..
அண்ணனுக்கு இந்த பாட்டு டெடிக்கேட்டட்: http://thenkinnam.blogspot.com/2009/01/911.html
:-)
happy birthday gopi
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! :))
வாழ்த்துகள் அண்ணே
முத்துக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் ;))
அருமையான பாடல்...அதுவும் அம்மா பாட்டு...மிக்க நன்றி ;)
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் ;)))
\\அண்ணனுக்கு இந்த பாட்டு டெடிக்கேட்டட்: http://thenkinnam.blogspot.com/2009/01/911.html\\
நன்றி தங்கச்சி ;)
happy b'day !
Nice and touching song.. love to hear anytime
VS Balajee
Post a Comment