Monday, July 13, 2009

எங்கிருந்தாய் நான் மண்ணில்



எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)


படம் : வின்னர் (2003)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஹாரீஸ் ராகவேந்திரா
வரிகள் :

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam