Saturday, July 18, 2009

தங்க மகன் இன்று சிங்க நடை





தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எறியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
(தங்க..)
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத்தாழ்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா
(தங்க..)

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தா மருதாணி
பிறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென் பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
(தங்க..)

தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது
தானே வந்த காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மன வானில் விழ வேண்டும் விழி தான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
எனை மாற்றீ விடு
இதழ் ஊற்றிக் கொடு
(தங்க..)

படம்: பாட்ஷா
இசை: தேவா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam