ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா
சின்ன சின்ன குறும்புகள் திட்டமிட்டு புரிகிறாள்
பொங்கி வரும் கோபத்தை புன்னகையில் துடைக்கிறாள்
கன்னக்குழியில் கவலை புதைப்பாள்
ஜடையில் ஆகாயம் இழுப்பாள்
இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லைகளின் பிள்ளையும் அவளே
நகமுள்ள தென்றலும் அவள்தானே
அலையை பிடித்து கரையில் கரையில் கட்டுவது நடக்கமுடிந்த செயலா
இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவாஆஆஆஆஆஆ
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. நச்சரிக்கும் சிட்டுக்குருவி
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி
ஹேஹேஹேஹேஹேஹே
பல்முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே
பாசத்தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே
அன்னை அன்னை அவளுக்கே அன்னை கூட இவள்தானே
மகளென்று வைத்திருக்கும் மாமியாரும் இவள்தானே
பள்ளி வகுப்பில் வில்லி இவளே
படிப்பில் ஹீரோயின் இவளே
ஆயிரம் கேள்விகள் எறிவாள்
அவள் மட்டும் விடைகள் அறிவாள்
டீச்சருக்கு வீட்டில் வகுப்பெடுப்பாள்
இவளை நாளை மணக்கப்போகும் அசடு என்ன பாடு படுவான்
இவள் பாதம் கழுவும் நீரில் சமயல் செய்வான்
நோ நோ நோ நோ நோ நோ நோ
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
ஹே.. ஹே..
கல்லை கூட கனிய வைத்து பல்லை காட்டி சிரிக்க வைக்கும்
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : AR ரஹ்மான்
பாடியவர்கள் : சுஜாதா, ஹரிஹரன், திப்பு, கார்த்திக், மதுமிதா
பாடல் வரிகள் : வைரமுத்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேன்கிண்ணத்தின் சூறாவளி .:: மை ஃபிரண்ட் ::. ற்காக சுஜாதா பாடிய இந்த பாடல் ஸ்பெஷலாக டெடிகேட் செய்யப்படுகிறது :-)
Wednesday, July 22, 2009
கன்னத்தில் முத்தமிட்டால் - சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
பதிந்தவர் G3 @ 9:50 AM
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சுஜாதா, திப்பு, மதுமிதா, வைரமுத்து, ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
தங்கச்சிக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))))
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சரியான பாடல் தேர்வுதான்..
இங்கும் வாழ்த்தினை பகிர்ந்து கொள்கின்றேன் :)
Happy birthday my dear Anu:)
நன்றி ஜி3 அக்கா. :-)
பாட்டு சூப்பர்.. நானும் அந்த பாட்டுல வர்ற பொண்ணு மாதிரி சுட்டிதான்.. ஹிஹிஹி.. :-)))
@புதுகையக்கா:
நன்றி :-)
@சென்ஷிண்ணே:
ஆமா ஆமா :-)
@அன்னம்:
நன்றி அக்கா. :-)
Post a Comment