என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
என்னம்மா தேவி ஜக்கம்மா
உலகம் தல கீழா தொங்குது ஞாயமா
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
சின்ன வயசுல சிகரட்ட புடிக்கிறான்
சித்தப்பன் கிட்டையே தீப்பெட்டி கேட்கிறான்
பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்ச தமிழனும் மம்மின்னு சொல்லுறான்
(என்னம்மா..)
சந்தன பூமி தந்தகம் ஆச்சு
காத்துக்கு இப்போ திணறுது மூச்சு
மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது
குளத்துலத்தான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது
அட விவசாயம் செய்யுன்னா வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மெய்க்கிறான்
(என்னம்மா..)
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா ஜக்கம்மா
ஜக்கம்மா ஜக்கம்மா
கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சுதான் தொங்குது
நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைப்பாதை தானே ஏழைக்கு கூடு
அட சாமிக்கு வளைகையில மனசார கும்பிட்டோம்
சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்
(என்னம்மா..)
படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், மாணிக்க விநாயகம்
Friday, July 31, 2009
என்னம்மா தேவி ஜக்கம்மா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
//பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது
பச்சத் தமிழனும் மம்மின்னு சொல்லுறான்//
:-)))))
எனக்குப் பிடித்த பாடல்
உங்கள் தேன்கிண்ணம் வலைப்பூ எங்கள் தளத்தில் இவ்வார வலைப்பூவாகச் சிறப்பிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்- 4Tamilmedia Team
தந்தகம் என்பதை 'கந்தகம்' என்று மாற்றவும். :)
"சந்தன பூமி கந்தகம் ஆச்சு"
Post a Comment