Tuesday, July 28, 2009

பூவேலி - காண்பதில் எல்லாம்



காண்பதில் எல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னொடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் வந்ததே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரியச் செய்யும்
நிலவை போலவே இருளும் புடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதிப்பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசிப் பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதிப் பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடிக் கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றைக் கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதின் இன்னொரு பாதி
யார் என்பதை இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

படம் : பூவேலி
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா

4 Comments:

Nathanjagk said...

இந்த படத்தில் இந்த பாடலுக்கு ஒரு விசேஷம் உண்டு. குமுதத்தில் இந்த பாட்டு வரிகளை ​வெளியிட்டு வாசகர்களிடமிருந்து ​மெட்டு ​கேட்டிருந்ததாக நினைவு. சரியா??

உடன்பிறப்பு said...

நல்ல பாடல் முதல் பின்னூட்டம் நல்ல தகவல்

Anonymous said...

பிடித்த பாடல் ..நன்றி

Anonymous said...
This comment has been removed by the author.

Last 25 songs posted in Thenkinnam