Tuesday, July 21, 2009

கிழக்குச் சீமையிலே : மானூத்து மந்தையில...



மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி - அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சுமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
வெல்லக் கொடல் வலிச்சா வெல்லப்பூண்டு உரிச்சி
வெல்ல கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கு தாய்ப்பாலத் தூக்கிக் குடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு


ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்
வெள்ளிச்சங்கு செஞ்சா வெளக்கி வெக்க வேணுமுன்னு
தஙத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

படம் : கிழக்குச் சீமையிலே
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

------------------------------------------------------------------------------
பாடலை விரும்பிக் கேட்டவர்:
கல்லூரியில் உடன்பயின்ற தன் உடன்பிறவாச் சகோதரிக்கு பொண்ணு பிறந்துட்டா என்றவுடன் சந்தோஷத்தில் துள்ளிக்குதிச்ச தாய்மாமா பிரபு
உங்க வாழ்த்துக்களை அவருக்கு தனிமடலிலும் தெரியப் படுத்தலாம் : skpprabhu@gmail.com
தொலை பேசி எண்: +91 9894186762

வாழ்த்துக்கள் தாய்மாமன் பிரபு!

1 Comment:

pudugaithendral said...

மாமனுக்கு வாழ்த்துக்கள்.


அருமையான பாடல். உறவின் பெருமை சொல்லும் பாடல். நன்றி

Last 25 songs posted in Thenkinnam