Friday, July 24, 2009

தாலி தானம் : ஒரு புல்லாங்குழல்....!



பி.சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!

வாணி ஜெயராம்:

என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!

பி.சுசீலா:
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!

வாணி ஜெயராம்:
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் சுவைத்தேன்

சுசீலா:
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்!

வாணி ஜெயராம்:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

சுசீலா:
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!

வாணிஜெயராம்:
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!

சுசீலா:
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்!

வாணி ஜெயராம்:
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்!

சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!

இருவரும்:
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam