Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்
நன்றி : சந்திரவதனா
இப்பாடலை விரும்பிக்கேட்டவர் : எழுத்தோசை தமிழரசி
1976ல் வந்த இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!
அறியத்தந்த ஷைலஜா அக்காவிற்கு நன்றி
அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!
அறியத்தந்த ஷைலஜா அக்காவிற்கு நன்றி
4 Comments:
1976ல் வந்த இந்தப் பாடலைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:
அந்தாதி முறையில் அமைந்த பாடலிது!
(சுட்டிக் காட்டியவர்: ஷைலஜா அக்கா)
என்னோட விருப்பப்பாடல்களில் இதுவும் ஒன்று.
//பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்//
இந்த வரிகளின் வலிமைதான் எத்தனை எத்தனை அதன் அர்த்தம்தான் எத்தனைஎத்தனை!
அளித்த சிபிகு நன்றிபல
சுகமாய் தாலாட்டியது தேன்கிண்ணம்... நன்றி விரும்பிய பாடலை அளித்தமைக்கு..
இனிய பாடலைத் தந்த சிபிக்கு நன்றி
Post a Comment