Thursday, July 30, 2009

அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம்

Get this widget | Track details | eSnips Social DNA


ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

படம் : அக்னி நட்சத்திரம்
பாடியவர் : S ஜானகி
இசை : இளையராஜா

3 Comments:

idhyam said...

//ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோஜாமனம் தினம்தினம்//

ரோஜாமனம் அல்ல
ரோமாஞ்சனம் தினம் தினம்

தயவு செய்து வரியை மாற்றிவிடவும.

G3 said...

நன்றிங்க இதயம்.

தவறுக்கு மன்னிக்கவும். சுட்டி காட்டியதற்கு நன்றி. இப்பொழுது மாற்றிவிட்டேன் :))

கோபிநாத் said...

தேனீக்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ;)

Last 25 songs posted in Thenkinnam