Thursday, July 2, 2009

சூரி - பிரிவெல்லாம் பிரிவல்ல


Tamilmp3world.Com - Pirivellam Pirivu.mp3 - Soori

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..
சிறு பிரிவாலே நீங்குமேனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..

காலையில் கதிரவன் கடல்விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலைதொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல்விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல்தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..
சிறு பிரிவாலே நீங்குமேனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..

கடலோடு கடலோடு முகில் பிரியும் மழையாக தான்
காற்றோடு காற்றோடு சுரம் பிரியும் இசையாக தான்
தரியோடு தரியோடு இழை பிரியும் உடையாக தான்
தளிரே நம் பிரிவெல்லாம் பிரிவெல்லாம் உறவாக தான்
பிளந்தால் தான் அணு கொண்ட ஆற்றல் தெரியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய் காதல் மேன்மை புரியும்
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..

இமை இரண்டும் பிரியாமலே
அடி விழி இல்லை விழி இல்லை விழி இல்லையே
இரவொன்று பிரியாமலே
ஒளி ஒளி கொண்ட ஒளி கொண்ட பகல் இல்லையே
கரை இரண்டும் பிரியாமலே
அட நதி இல்லை நதி இல்லை நதி இல்லையே
கை இரண்டும் பிரியாமலே
ஒரு செயல் இல்லை செயல் இல்லை செயல் இல்லையே
தினந்தோறும் மழை என்றால் சுவை சுவை இல்லையே
கொஞ்சம் வெயில் காய்ந்து மழை வந்தால் சுகம் சுகம் கொள்ளையே
உருகாத மெழுகுக்கு ஒளி ஒளி இல்லையே
கொஞ்சம் பிரியாத உறவுக்கு பலம் பலம் இல்லையே
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..
சிறு பிரிவாலே நீங்குமேனில் அன்பென்ன அன்பா

ஒரு உடலை பிரியாமலே
ஒரு உயிருக்கு உயிருக்கு பிறப்பில்லையே
இரு உதடு பிரியாமலே
ஒரு சொல் இல்லை சொல் இல்லை சொல் இல்லையே
தண்டவாளம் பிரியாமலே
ஒரு ரயில் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லையே
எண்ணம் மனதை பிரியாமலே
ஒரு கவி இல்லை கவி இல்லை கவி இல்லையே
ஆழ் கிணற்று நீர் இரைப்பு பிரிவு பிரிவில்லையே
கொஞ்சம் வான் நிலவு மறைந்து சென்றால் பிரிவு முடிவில்லையே
பிரியாத உறவோடு ருசி ருசி இல்லையே
இந்த பிரிவுக்கும் உறவென்று பெயர் பெயர் முல்லையே
பிளந்தால் தான் அணு கொண்ட ஆற்றல் தெரியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய் காதல் மேன்மை புரியும்

காலையில் கதிரவன் கடல்விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலைதொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல்விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல்தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..
சிறு பிரிவாலே நீங்குமேனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா..

படம் : சூரி
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, சின்மயி

2 Comments:

ஆயில்யன் said...

ப்ரெண்ட்ஸ் நினைச்சு ஃபீல்பண்ண வைச்சிட்டீங்களே :(

G3 said...

Avvvvvv.. En friends ellam romba feel pandraangannu avangalukkaga paata pottutu link anuppi vechen.. ungakitta reverse effect aayiducha :(

Last 25 songs posted in Thenkinnam