Friday, July 17, 2009

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்




உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழில் விரிந்து குளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சுழும் தீ

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனை காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று
நிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போஸ்
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஒஹோ..ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை

படம் : பச்சை கிளி முத்துச்சரம் (2007)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் :கெளதமி ராவ், ரோபி
வரிகள் : தாமரை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam