Sunday, July 12, 2009

உண்மை வெல்வாய் தமிழா




தமிழா தமிழா தமிழா தமிழா

உண்மை வெல்வாய் தமிழா
உலகை வெல்வாய் தமிழா
இமயமலையை இடுப்பில் கட்டி
இழுத்து வருவாய் தமிழா
(உண்மை..)

தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்
தமிழன் நாட்டில் வர வேண்டும்
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்
கைகள் கட்டி தொழ வேண்டும்
செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்
செல்வாக்கெல்லாம் பெற வேண்டும் வேண்டும்

வாயைக் கட்டி வயித்தை கட்டி வரியை கட்டுகிறாய்
அந்த வரிகள் எங்கே வழிகிறதென்று வழிகள் அறிவாயா
பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே சுதந்திரம் வந்ததடா
ஆனால் கட்டியிருந்த கோவணம் கூட களவு போனதடா
கருப்புக்கோழி காணோம் என்று
காவல் நிலையம் போன மகள்
கற்பைக் காணோம் காணோம் என்று
கதறிக் கொண்டு திரும்புவதோ
ஜனாபதியும் ரிக்‌ஷாக்காரனும் சட்டத்தின் முன் ஒருவரடா
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி உணரச் செய்வது கடமையடா
சுதந்திரம் காக்க போராடு சட்டம் தெரிந்து வாதாடு
சுற்று சூழலும் சூழ்ச்சி உடைத்து வெற்றி குளத்தில் நீராடு
தமிழா தமிழா தமிழா தமிழா
(உண்மை..)

படம்: தமிழன்
இசை: D இமான்
பாடியவர்: கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam